ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு பதிலாக கோத்தபாய ராஜபக்சவை களமிறக்க பலரும் ஆதரவு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், இரண்டாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்ற அறிவித்திருந்தார்.

எனினும், காலப்போக்கில் அந்நிலைப்பாட்டை மாற்றி – நாட்டுக்காக இரண்டாவது தடவையும் களமிறங்குவேன் எனவும் ஜனாதிபதி  குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்  அரசியல் குழப்பத்தோடு மைத்திரியின் செல்வாக்கு சரிந்துவிட்டதால், பதவிக்காலம் முடிந்ததும் அரசியலுக்கு விடுப்புகொடுக்க ஜனாதிபதி  தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து  பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் எனவும்   எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில் கோத்தபாய ராஜபக்சவை களமிறக்குவதற்கு  ஜனாதிபதி முயற்சிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நபரொருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாது. எனவே, மஹிந்தவுக்கு பதிலாக கோத்தபாய ராஜபக்ச வை களமிறக்க பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றதாக தெரிவிக்கபடுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைகோத்தபாய ராஜபக்சஜனாதிபதிதேர்தல்மைத்திரிவேட்பாளர்
Comments (0)
Add Comment