பலாங்கொட, வேலிஓய, கொட்டவேஹெரமன்கட மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி சமூக நல சேவை நடைபெறுகின்றது. இன்று காலை 8.00 மணி முதல் இந்நிகழ்வு நடைபெறுகின்றது.
கிராம மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரதான சுகாதார பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு உரிய காலத்தில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. கண் பரிசோதனை செய்து மூக்குக் கண்ணாடி பெற்றுக் கொடுத்தலும், சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தலும், தொற்றாத நோய்கள் குறித்து பரிசோதனை செய்து அவற்றுக்கு சிகிச்சை அளித்தல், புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் இந்த மருத்துவ முகாமின் மூலம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.