ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். முதல் நிகழ்வாக பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு அங்கு அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இதனையடுத்து யாழ். மாவட்ட குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக வடமராட்சியில் அமைக்கப்பட்டவுள்ள பெரும் நீர்த்தேக்கத்திற்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இதன் பின் சுன்னாகம், திண்ணை இயற்கை விவசாயப் பண்ணையில் தேசிய நீர் இணைப்புக்கான ஒன்றுகூடல், யாழ். இந்து ஆரம்ப பாடசாலை கட்டட திறப்பு, ஸ்மாட் ஸ்ரீலங்கா கட்டட திறப்பு, வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி திறந்து வைப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.