ஜப்பானில் பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு – 300 பேரை காணவில்லை

ஜப்பானில் பெய்து வரும் மிகவும் மோசமான மழை காரணமாக இதுவரை அங்கு 130 பேர் பாலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில் அங்கு சுமார் 650 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு’ள்ளது
.
அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் அதிகமான மழை எனவும்  வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.

ஜப்பானின் மத்திய பகுதி மற்றும், மேற்கு பகுதிகளில் உள்ள, தீவுகளில் மழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு மழை பெய்து வருகிறது.இந்த மழை இன்னும் தொடரும் என்று கூறப்படுகிறது.

இதன்  காரணமாக அங்கு 130 பேர் பாலியாகி உள்ளதோடு  300 பேர் காணவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மீட்புப்பணிகளில் மொத்தம் 74,000 பேர் ஈடுபட்டு வருகின்றதாகவும், 2.4 லட்சம் வீடுகளில் உள்ள மக்கள் உணவின்றி கஷ்டபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் நவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  பகுதிகளை விட்டு மொத்தம் 20 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளதோடு 10000க்கும் அதிகமான வீடுகள் கட்டிடங்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றது..

இதேவேளை இன்னும் ஒரு வாரம் அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்வுகனமழைஜப்பான்பலி எண்ணிக்கை
Comments (0)
Add Comment