ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் தரையிறங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, இந்த தாக்குதலை பாகிஸ்தான் படையினர் நடத்தியுள்ளனர்.
ஜம்மு மாவட்டத்தின் ஜோக்வான் பகுதி எல்லைக்கோடு அருகேயுள்ள இந்திய நிலை மீது மீது பாகிஸ்தான் வீரர்கள் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்கியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தாக்குதல் நடத்தினர். சில நிமிடங்கள் நீடித்த இந்த சண்டையில், இந்திய தரப்பில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.