சென்னையில் தமிழர்கள் வீர விளையாட்டு புகைப்படக் கண்காட்சியை தொடக்கி வைத்துப் பேசிய நடிகர் கமல் ஹாசன், ஜல்லிக்காட்டு தமிழகத்தில் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம் என்று கூறியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு என்றும் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு இந்தியாவில் நடைபெற்றால், வெளிநாட்டு பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றும் இதனால் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என்றும் கமல் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புருத்தப்படுவதில்லை என கூறிய கமல், ஏறு தழுவதல் மட்டுமே நடைபெறுவதாக தெரிவித்தார்.