அ.தி.மு.க. பொது செயலாளர் வி.கே.சசிகலாவை மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் ஜெ.சுந்தர்ராஜன், செயலாளர் வி.சுந்தர்ராகவன், துணைத் தலைவர் வி.பெரியசாமி, பொருளாளர் டி.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும்; வாடிப்பட்டி தாலுகா, பாலமேடு கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் சி.செல்லத்துரை, செயலாளர் பி.கார்த்திகைராஜன், பொருளாளர் ஏ.டி.சுப்புராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும்; அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் ஏ.கே.கண்ணன், செயலாளர் எம்.ராமசாமி, துணைத் தலைவர் ஓ.பெரியசாமி, பொருளாளர் ஏ.மாயாண்டி உள்ளிட்ட நிர்வாகிகளும் தனித் தனியே நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்தத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து, நமது கலாசாரப் பெருமைகளை கட்டிக் காத்த, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறு உருவமாகத் திகழும் வி.கே.சசிகலாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வி.கே.சசிகலா தலைமையேற்று தொடங்கி வைத்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த சந்திப்பு நிகழ்வின் போது, அ.தி.மு.க. புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கி.மாணிக்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டதையொட்டி, தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் தளபதி, சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன், சின்னத்திரை எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ராஜ்பிரபு, சின்னத்திரை படத் தொகுப்பாளர் சங்கத்தின் தலைவர் ராஜா, சின்னத்திரை ஒலிப்பதிவாளர் சங்கத்தின் தலைவர் நேமிராஜ் உள்ளிட்டோர் வி.கே.சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோன்று, தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயிஸ் யூனியன் தலைவர் பழ.அன்பரசு, பொது செயலாளர் பொன்.வல்லரசு, பொருளாளர் கே.சி.ஆ.ரவி உள்ளிட்ட நிர்வாகிகளும், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் நிறுவன தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், கூடுதல் பொது செயலாளர் எம்.மாரித்தங்கம், துணை தலைவர் டி.செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும்; அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் நிறுவன தலைவர் வி.ஜி.சிற்றரசு தேவர், பொது செயலாளர் ராம.சுப்ரமணிய காடுவெட்டியார், கொள்கை பரப்பு செயலாளர் கே.என்.சிதம்பரம், பொருளாளர் என்.இந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும், தனித்தனியே நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் வி.கே.சசிகலா தனது நன்றியை தெரிவித்து கொண்டார். இவ்வாறு கூறப்பட்டுள்ளன.