ஜி.கே. வாசன் பாபநாசத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார்

பாபநாசத்தில் நாளை ஜி.கே. வாசன் பிரசாரத்தை தொடங்குகிறார்.  தமிழக சட்டசபை தேர்தல் மே 16–ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.  த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நாளை (புதன்கிழமை) தனது பிரசாரத்தை தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தொடங்குகிறார். நாளை காலை 10 மணிக்கு அங்குள்ள கடை வீதியில் பிரசாரத்தை தொடங்கும் அவர் த.மா.கா.வின் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசுகிறார்.

பின்னர் திருவையாறு செல்லும் அவர் மா.கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

சட்டசபைஜிகே வாசன்தமீழகம்தலைவர்கள்பாபநாசம்பிரச்சாரம்
Comments (0)
Add Comment