அதன்பின்னர் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 11ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூன் 13-ந் தேதி கடைசி நாளாகும். இறுதியாக ஜூன் 30-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆர்கே நகர் தொகுதி உறுப்பினர் வெற்றிவேல் ராஜினாமா செய்ததை அடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.