மேலும் பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி ஆகிய வட்டங்களில் இன்று முதல் வரும் ஜூலை 7ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இளவரசனின் சொந்த ஊரான நத்தம் உட்பட 195 கிராமங்களில் இந்த தடை அமலில் உள்ளது. வரும் ஜூலை 4ஆம் தேதி இளவரசனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், நத்தம் கிராமம் அதன் சுற்றுப்பகுதிகளில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நத்தம் கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.