ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு 27–ந் தேதி விசாரிக்கப்படும்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வருகிற 27–ந் தேதிக்கு தள்ளிவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேல்முறையீடு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் 27–ந் தேதி பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தற்போது அவர்கள் 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று தனித்தனியாக 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

27–ந் தேதிக்கு தள்ளிவைப்பு    இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி சந்திரசேகர், ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மற்றும் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தார்.

மூல வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வருகிற 27–ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படுமா என்று வக்கீல் ராம்ஜெத் மலானியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இது குறித்து எனது கட்சிக்காரர் முடிவு செய்யவார் என்றார்.

மேலும் ஒரு அ.தி.மு.க. வக்கீல் கூறும்போது, இன்னும் ஒன்றிரண்டு நாளில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம் என்றார்.

ஐகோர்ட்டுகர்நாடகாசந்திரசேகர்சொத்துஜெயலலிதாஜெயல்லிதாதீர்ப்புநீதிபதிமேல்முறையீடுவழக்கு
Comments (0)
Add Comment