ஜெயலலிதாவிற்காக எஸ்.பி. திவ்யஸ்ரீ பெங்களூர் பரப்பன அக்ரஹராவுக்கு மாற்றம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக மைசூர் மத்திய சிறையில் இருந்த எஸ்.பி. திவ்யஸ்ரீ பெங்களூர் பரப்பன அக்ரஹராவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிறை வளாகத்தில் உள்ள நிர்வாக பிளாக்கில் வி.வி.ஐ.பி. அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததும் அவரை பார்த்துக் கொள்வதற்காக மைசூர் மத்திய சிறையில் பணியாற்றிய எஸ்.பி. திவ்யஸ்ரீ பெங்களூர் சிறைக்கு உடனடியாக மாற்றப்பட்டதாக தெரிகிறது.

தற்போது ஜெயலலிதா இருக்கும் வி.வி.ஐ.பி அறைக்கு அருகில் தான் திவ்யஸ்ரீயின் அலுவலகம் உள்ளதாகவும் திவ்யஸ்ரீயின் கண்காணிப்பில் தான் ஜெயலலிதா உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜெயலலிதாவை திவ்யஸ்ரீ தான் கவனித்து வருகிறார் என்பதை கர்நாடக சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா தற்போது உறுதி செய்துள்ளார்.

அக்ரஹாராஎஸ்.பி. திவ்யஸ்ரீசிறைஜெயலலிதாதண்டனைதமிழகம்பரப்பனமுதல்வர்முன்னாள்வழக்கு
Comments (0)
Add Comment