காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு, கடந்த 18 நாள்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இன்று மாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, முதல்வரின் உடல்நலம் குறித்து அவர் சிகிச்சை பெறும் தளத்திற்கு சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் வெளியே வந்த வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர். முதல்வரின் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறினார்.