ஜெயலலிதா மரணம் குறித்து ராகுல்காந்தியிடம் விசாரணை!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆணையம் தற்போது விறுவிறுப்பாக விசாரணையை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா, அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட பலர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது தமிழக முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பலர் சந்தித்தனர்.

அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெலலிதா உடல் நலம் விசாரித்தார். அவர் ஜெலலிதாவை சந்தித்ததாகவும் நலம் பெற்று விரைவில் திரும்புவார் என்றும் வெளியில் கூறினர். அதன் அடிப்படையில் ராகுல் உள்ளிட்டவர்களிடம் விசாரிப்பது குறித்து கமிஷன் ஆலோசித்து வருகிறது.

ஜெயலலிதாமரணம்ராகுல்காந்திவிசாரணை
Comments (0)
Add Comment