ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிவகாசி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தங்கத்தேர் இழுத்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாவட்டம் முழுவதிலும் பல்வேறு இந்து கோயில்கள், தர்காக்கள், கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்று வருகின்றது.
விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக செய்தி விளம்பரம் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக சிவகாசி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தங்கத்தேர் இழுத்துள்ளார்.