இந்த இடைப்பட்ட காலத்திற்குள் மனுதாரும், எதிர்மனுதாரரும் தங்களிடமுள்ள ஆவணங்களை பகிர்ந்துக்கொள்ளவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், கர்நாடக அரசும், திமுக அன்பழகனும் பதில் மனுத்தாக்கல் செய்த பிறகு தேவைப்பட்டால் ஜெயலலிதா தரப்பு பதில் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் பினாகி சந்திரபோஸ், ஆர்.கே.அகர்வால் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கர்நாடக அரசும், அன்பழகனும் பதில் மனுத்தாக்கல் செய்ய 6 வார காலம் அவகாசம் கோரியுள்ளதற்கு வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போதுமான அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நவம்பர் 23ஆம் அது குறித்து விவாதிக்கலாம் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.