இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு ஐகோர்ட்டு, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஜெயல்லிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் முதல் அமைச்சர் ஆனார்.
இந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த டிராபிக் ராமசாமி, ஜெயலலிதா பெற்ற வெற்றியை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் நீதிபதி புஸ்பா சத்தியநாராயணா முன்பு இன்று விசாரணைக்கு வந்த்து.
அப்போது ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பி.குமார், வக்கீல்கள் செல்வகுமார், திவாகர், கருப்பையா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். டிராபிக் ராமசாமி ஆஜராகாத்தால், விசாரணையை நாளை மறுநாளுக்கு (புதன் கிழமைக்கு) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.