ஜெயின் உடல்நலன் குறித்து விசாரித்த வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரித்தார்.

பின்னர் ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.  அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஆளுநருடனான சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்றும், நட்பு ரீதியான சந்திப்பு என்றும் கூறினார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது பழைய நண்பர் என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இயற்கை அன்னையை வேண்டிக்கொள்வதாக கூறிய அவர், தமிழகத்தில் பொறுப்பு முதல்வரோ இடைக்கால முதல்வரோ நியமிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

அப்பல்லோஆஸ்பத்திரிஉடல்நலன்சென்னைபொதுச்செயலாளர்மதிமுகமுதலமைச்சர்வைகோ
Comments (0)
Add Comment