ஜெயின் பிறந்தநாள் கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு

சென்னை அருகே தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

சென்னை கோட்டூர்புரம் அருகே பொன்னியம்மன் கோவில் அருகே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்.பி.ஜே.கே.ரித்திஸ் உள்ளிட்ட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் அருகில் இருந்த சிலர் காயமடைந்தனர்.

பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் பலத்த சேதம் அடைந்தன. மேலும் அப்பகுதியில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சென்னைஜெயலலிதாதமிழகம்நாட்டுபரபரப்புபொதுகூட்டம்வெடிகுண்டுவெடிப்பு
Comments (0)
Add Comment