ஜெயின் வழக்கு விபரத்தை அறிக்கையாக வெளியிட்ட கருணாநிதி

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு பற்றி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வீடு வீடாக வினியோகித்தார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை விவரத்தை திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையாக வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கை திமுக தலைமை கழகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இதை நாடு முழுவதும் திமுகவினர் பொது மக்களிடம் வினியோகம் செய்து வருகிறார்கள். அதன்படி, தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழ கன் எம்.எல்.ஏ. நேற்று சேப்பாக்கம் தொகுதி பார்டர் தோட்டம், தி.நகர் பகுதிகளில் வீடு வீடாக மற்றும் கடைகளில் இந்த புத்தகங்களை வினியோகம் செய்தார்.

அவருடன் பகுதி செயலாளர் மதன்மோகன், நிர்வாகிகள் சின்னராஜ், சிதம்பரம், பிரபாகரன், பாலசந்திரன், தமீம் அன்சாரி, ஜெகதீசன், உதயகுமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இதுபற்றி ஜெ.அன்பழகன் கூறுகையில், ‘ஜெயலலிதாவின் ஊழல்களை இந்த புத்தகத்தில் திமுக தலைவர் கருணாநிதி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இதை படித்தால்தான் மக்கள் தெளிவு பெற முடியும்,’ என்றார்

அன்பழகன்அறிக்கைஎம்எல்ஏகருணாநிதிகுவிப்புசொத்துஜெயலலிதாபுத்தகம்வழக்குவிசாரணைவிநியோம்வீடு
Comments (0)
Add Comment