ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனை..

பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோரால் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட  ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட சம்பந்தப்பட்ட வழக்கு ஹோமாகம நீதிமன்றில் இடம்பெற்றபோது

அத்துமீறி பிரவேசித்த  ஞானசார தேரர்,  பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை கடுமையாக எச்சரித்திருந்தார்.

இதைஅடுத்து தேரருக்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதற்கமைய ஒரு வருடத்துக்கான சிறைத் தண்டனை 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்ததை அடுத்து,

திறந்த நீதிமன்றத்தில் அமைதியற்ற வகையில் செயற்பட்டமை, பிரகீத் எக்னலிகொடவின் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  தேரரிற்கு எதிராக   மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஆராய்ந்த சட்ட மா அதிபர், ஞானசார தேரருக்கு எதிராக 4 குற்றங்களின் கீழ் குற்றப்பத்திரத்தினை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையிலேயே   தேரருக்கு எதிரான   குற்றங்கள்  நிரூபணமாகியுள்ளதாக அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற  நீதிபதிகள் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

16 வருடம்சட்ட மா அதிபர்சிறைஞானசார தேரர்
Comments (0)
Add Comment