கோவையில் டாஸ்மாக் கடையின் மீது கூலி தொழிலாளி ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் கூலி தொழிலாளி பத்மநாபன் என்பவருக்கும், பார் ஊழியர்களுக்கும் இடையே நேற்று வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. தாக்குதலில் காயமடைந்த பத்மநாபனை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த பின்னர் பத்மநாபனை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே இரவில் டாஸ்மாக் கடைக்கு சென்ற பத்மநாபன், தன்னிடம் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை டாஸ்மாக் கடை மீது வீசியுள்ளார். இதையடுத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் பத்மநாபனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.