டில்லி முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றதால் பெரும் மகிழ்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க செல்வோருக்கும் மற்றும் சுற்றுப்புற பகுதிக்கு இலவச சர்வீஸ் அடித்தனர். கெஜ்ரிவால் இன்றைய பதவியேற்பு விழாவில் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். அருகில் உள்ள மாநில ஆதரவாளர்களும், வெளி மாநிலத்தை சேர்ந்த கெஜ்ரிவாலின் ஆதரவாளர்களும் டில்லியில் குவிந்தனர்.
பல தொண்டர்கள், சிறார்கள் கெஜ்ரிவால் போல் வேடம் அணிந்து வந்தனர். இதற்கிடையில் டில்லியை ஒட்டிய அரியானா மாநிலம் ஆட்டோ டிரைவர்கள் இன்று இலவச சவாரி அடித்தனர். அரியானாவின் சுற்றுப்பகுதிகளிலும், மற்றும் டில்லிக்கு அழைத்து செல்வதிலும் ஆர்வம் காட்டினர். இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில்; கெஜ்ரிவால் மீது எங்களுக்கு அபார நம்பிக்கை உள்ளது . அவர் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார். எங்களுக்கு நன்மைகள் செய்வார் என்று தெரிவித்தனர். பல ஆட்டோக்களில் கெஜ்ரிவால் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.