டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக யமுனை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஹத்திக்குந்த் அணை நிரம்பி உபரி நீர் யமுனை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
கனமழை காரணமாக ஹரியாணா அரசு, யமுனை ஆற்றில் 2 லட்சம் கன அடி நீரை திறந்து விட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,
இன்று காலைநேர நிலவரப்படி யமுனை ஆற்றில் 2,11,874 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால்டெல்லியில் யமுனை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை தொட்டுக் கொண்டு செல்லும் அளவிற்கு தண்ணீர் செல்கின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கூடுதல் உபரி நீர் திறக்கப்படும் என ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.
இதனால் டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.