டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் படித்த தமிழக மாணவர் தற்கொலை

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் எம்.பில். படித்து வந்த மாணவர் முத்து கிருஷ்ணன்.  இந்நிலையில், அவர் தனது நண்பர் தங்கியிருந்த முனீர்கா என்ற இடத்தில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவரான முத்து கிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவர் ரோஹித் வெமுலா இயக்கத்திற்கான நீதி என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் ஆவார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்டெல்லிதமிழக மாணவர்தற்கொலை
Comments (0)
Add Comment