தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் துப்பாக்கிசூடு- நால்வர் பலி..ஐவர் படுகாயம்…

தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில்  ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே  இவ்வாறு  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ரி – 56 ரக துப்பாக்கியும், கைத்துப்பாக்கியும் பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்லனர்.

சம்பவத்தில்  காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை நத்தார் பண்டிகையன்று இவ்வாறானதொரு அசம்பாவிதம்  இடம்பெற்றுள்ளமை அப்பகுதி மக்களை   அச்சத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்புஐவர்தங்காலைதுப்பாக்கிசூடுபடுகாயம்
Comments (0)
Add Comment