தஞ்சையில் 20 இடங்களில் ஜூன் 26-ல் மறியல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி முடிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் துறையினரைக் கண்டித்து 20 இடங்களில் ஜூன் 26-ம் தேதி மறியல் போராட்டம் நடத்துவது எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில, எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் கட்சியின் துணைப் பொதுச் செயலர் ஆர்.பி. தமிழ்நேசன் தெரிவித்தது:

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீதும், இரு சமூகத்தினர் மீதும் தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்குக் காரணமான ஆய்வாளர், உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கமும், இடமாற்றமும் செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூர், வல்லம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு உள்பட 20 இடங்களில் ஜூன் 26-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஆர்.பி. தமிழ்நேசன் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி. தமிழ்நேசன்ஆலோசனைக் கூட்டம்கோரிக்கைசாலை மறியல்தஞ்சாவூர்தமிழக வாழ்வுரிமைக் கட்சிபோராட்டம்
Comments (0)
Add Comment