சிறுவர்,மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.
தனது இராஜினாமாக் கடிதத்தை அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நேற்றையதினம் அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை விஜயகலா மகேஸ்வரன் யாழ். வீரசிங்கம் மணடபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டுமெனத் தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாகவே அவர் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.