தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதாக, தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்திகளை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கச்சா எண்ணெய்யை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று, யூனிட் 4 ரூபாய் 27 காசுகளுக்கு மின்சாரம் வழங்க முன்வந்தும், யூனிட் ஒன்று 5 ரூபாய் 05 காசுகள் என்கிற அளவில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.
தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால், மின்சார வாரியத்தின் இழப்பு 94,000 கோடி ரூபாயை எட்டிவிட்டதாகவும் கருணாநிதி கூறியுள்ளார். மூன்றாண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட உடன்குடி மின்திட்டம், இப்போது வரை தொடங்கப்படவில்லை என்றும் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.