தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: ராஜ்நாத் சிங் உறுதி

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

 இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மழை பாதிப்பு குறித்த தமிழக அரசின் ஆய்வறிக்கை கிடைத்தவுடன், ஆய்வு நடத்த மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கன மழைஜெயலலிதாதமிழகம்நிவாரணம்மத்திய அரசுராஜ்நாத் சிங்
Comments (0)
Add Comment