தமிழகத்திற்கு வடமாநிலத்திலிருந்து வரும் 19 ரயில் சேவைகள் நாளை மறுநாள் வரை ரத்து

மத்தியபிரதேச மாநிலம் இட்டார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நாளை மறுநாள் வரை வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, டெல்லியிலிருந்து இன்றிரவு 11.50 மணிக்கு புறப்படும் டெல்லி-புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், 22ம் தேதி, 6.40 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்படும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில், ஜம்மு-காஷ்மீரிலிருந்து புறப்படும் கன்னியாகுமரி- திருநெல்வேலி ஹிம்சாகர் வாராந்திர விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் லக்னோ, இந்தூரிலிருந்து சென்னை வரும் வாராந்திர ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போல், திங்கள் கிழமைக்கான நிஜாமுதீன் – எர்னாக்குளம் மில்லினியம் வாராந்திர ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தகவல்தமிழகம்தீ விபத்துமத்தியபிரதேசம்ரத்துரயில் சேவைகள்விரைவு ரயில்
Comments (0)
Add Comment