தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீட்டிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

கேரளா அருகே மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 8 சென்டி மீட்டர் மழையும்,அடுத்தபடியாக ஏற்காட்டில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

  வேலூர் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து நேற்றிரவு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறியது. பின்னர் ,இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று காலை மேலடுக்கு சுழற்சியாக மாறியது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்சென்னைதமிழகம்மழை நீட்டிக்கும்வானிலை ஆய்வு மையம்
Comments (0)
Add Comment