தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது – பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரை தெற்கு சட்ட மன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து கீழவெளி வீதி பந்தடி தெருவில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது.

இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:– குஜராத் முதல்– மந்திரியாக மோடி இருந்தபோது மின் பற்றாக்குறையை போக்கினார். பெண் கல்வி சுகாதாரத்தை மேம்படுத்தினார். அத்தகைய நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்றைக்கு தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் இருண்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளன. மக்களை ஏமாற்றும் வகையில் படி அரிசி திட்டத்தை கூறி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இரு கட்சிகளின் இலவச திட்டங்களுக்கு மக்கள் ஆசை பட்டால் மாநிலத்தில் வளர்ச்சி அடையாது. தற்போதைய மத்திய பாரதிய ஜனதா அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி செலவில் சாலை பணிகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனவே தமிழகத்தில் வளர்ச்சி ஏற்பட தாமரை சின்னத்துக்கு வாக்களித்து பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றி பெற கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

ஊழல்கூட்டம்தமிழகம்துறைபிரசாரம்பொன்.ராதாகிருஷ்ணன்
Comments (0)
Add Comment