தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் சூழல் எங்களால் உருவாகாது : ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சேலத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,  தர்மயுத்தம் வெற்றியை நோக்கி பயணம் செய்கிறது. ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய குறிக்கோளாகும். தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சி மலரும். தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் சூழல் எங்களால் உருவாகாது. ஆனால் எடப்பாடி அணியினரே அதற்கு காரணமாக அமைந்துவிடுவார்கள். ஆட்சியை 122 எம்.எல்.ஏ.க்களை கொண்டு தத்தி தத்தி நடத்திவிடலாம் என நினைக்கிறார்கள். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்த போது அவருடன் ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே இருந்தார்.

திமுகவின் சதிகளை முறியடித்து அதிமுகவை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. தலைமை செயலகம் செயலிழந்துவிட்டது, வளர்ச்சித்திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வளர்ச்சி திட்டங்களை பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுத்து இல்லை. ஜெயலலிதா இருந்து இருந்தால் கியா மோட்டார்ஸ் வேறு மாநிலத்திற்கு சென்று இருக்காது. சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நிலையை தடுக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என பேசியுள்ளார்.

 

அதிமுகஆட்சிஎடப்பாடி பழனிசாமிஓ.பன்னீர்செல்வம்ஜெயலலிதாதமிழகம்
Comments (0)
Add Comment