தமிழகத்தில் எந்த சக்தியாலும் திமுகவை அழிக்க முடியாது – கருணாநிதி

தமிழக மக்களை பாரதிய ஜனதா கட்சி ஏமாற்ற முயற்சிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திற்கு பின்னர், கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றியபோது, கருணாநிதி இவ்வாறு கூறினார்.

திமுகவை அழிக்க பாரதிய ஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டிய கருணாநிதி, ஆனால் அந்த முயற்சிகள் ஈடேறவில்லை என்றார். தமிழகத்தில் எந்த சக்தியாலும் திமுகவை அழிக்க முடியாது எனவும் கருணாநிதி கூறினார். என்றைக்கும், யாருக்கும் திமுக அடிபணியாது என்றும் கட்சியின் கொள்கைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் கருணாநிதி கூறினார்.

ஏமாற்றகட்சிகருணாநிதிஜனதாதமிழகம்தலைவர்திமுகபாரதியமக்கள்முயற்சிவிமர்சனம்
Comments (0)
Add Comment