தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து, மத்தியக்குழு இன்று மீண்டும் ஆய்வு நடத்துகிறது. இதற்காக மத்திய குழுவின் தலைவர் பிரசாத் மற்றும் குழுவின் உறுப்பினர்களான மீனா,சுமித் கோயல்,பெஹ்ரா,ஜர்க்கார் ஆகியோர் நேற்றிரவு சென்னை வந்தனர்.
மத்திய குழுவினர் தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சென்னையில் இன்று மழை வெள்ள சேதங்கங்களை மதிப்பிடும் பணியை தொடங்குகின்றனர். இரண்டு நாட்கள் தமிழகத்தில் தங்கும் மத்திய குழுவினர் கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெள்ள சேதத்தை கணக்கிடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.