தமிழகத்தில் கத்தியை திரையிட அனுமதிக்க மாட்டோம் – வேல்முருகன்

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வேல்முருகன் தலைமை வகித்தார். இதில் 150க்கும் மேற்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினரின் லைக்கா நிறுவனம் விஜய் நடிக்கும் கத்தி படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம். இந்த நிலையில் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர், விநியோகஸ்தர்களை சந்த்த்து பேச உள்ளோம். சந்திப்பின்போது எங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் கத்தி திரைப்படத்தை தீபாவளி அன்று தமிழகம் முழுவதும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றார்.

அனுமதிஇல்லைகத்திதமிழகம்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்புதிரைதீபாவளிநிர்வாகிகள்ராஜபக்சலைக்காவிஜய்வேல்முருகன்
Comments (0)
Add Comment