மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக லேசானது முதல் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகே வானில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்றும், தமிழகத்தில் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.