மக்கள் நலக் கூட்டியகத்தின் செயல் திட்ட விளக்க பொதுக் கூட்டம் சென்னை ஏழும்பூரில் நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, மக்கள் நலக் கூட்டியக்கம் இனி மக்கள் நலக் கூட்டணியாக செயல்படும் என தெரிவித்தார்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கப்படமாட்டாது என தெரிவித்த வைகோ, தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி செயல்படும் என தெரிவித்தார்.
ஒத்தக் கருத்துடைய கட்சிகளை தாங்கள் வரவேற்பதாகவும் வைகோ அறைகூவல் விடுத்துள்ளார்.