சென்னை விமான நிலையத்தில் இருந்து சின்னமலைக்கு முதல் மெட்ரோ ரெயிலை ஓட்டிய டிரைவர் நளினி கூறியதாவது:-
கோவையைச் சேர்ந்த நான் பாலிடெக்னிக் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பாடப்பிரிவை எடுத்து படித்தேன். 2 வருடங்களுக்கு முன் பணியில் சேர்ந்தேன். மெட்ரோ ரெயிலை இயக்க நான், அம்சவேணி, சுபத்ராதேவி உள்ளிட்ட பல பெண்கள் பயிற்சி பெற்றோம். மெட்ரோ ரெயிலை ஓட்டி பல சோதனை ஓட்டங்கள் நடத்தி இருக்கிறேன்.
ஆனால் முதன் முதலாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மத்திய மந்திரி வெங்கையாநாயுடு ஆகியோர் கொடி அசைத்து வைத்தபின்னர் நான் அந்த மெட்ரோ ரெயிலை இயக்கியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நாள் எனக்கு பொன்னான நாள். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரெயிலை ஓட்டுவேன். இவ்வாறு நளினி தெரிவித்தார்.