தமிழகத்தை 50 ஆண்டுகாலமாக அடிமையாக்கி அ.தி.மு.க.–தி.மு.க., அரசியல் செய்கின்றனர். தமிழர்களுக்கு என்று அரசியலோ, அதிகாரமோ, வலிமையோ இல்லை. உலகில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மக்கள் எம் தமிழ் மக்கள். இந்தியாவில் மிக, மிக பின்தங்கிய மொழி இந்தி, மூத்த மொழி தமிழ் தான். ஏசு பிறப்பதற்கு முன்பே தொல்காப்பியம் நூல் இருந்துள்ளது. நாம் தமிழகத்தின் மொழி, இனப்பற்றை மறந்து விட்டு இலவச பொருட்களுக்காக காலில் விழுந்து ஏங்குகிறோம். தமிழகத்தில் அனைத்து வளங்களும் உள்ளது. தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை தமிழர்களை தமிழன் ஆள வேண்டும் என்பது தான், தமிழர்கள் வாழ வேண்டும் என்பது அல்ல. மக்கள் எல்லோருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையான ஆட்சி நடத்த வேண்டும்.
தமிழர்களின் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஏர்தழுவுதல் விளையாட்டு தான் மருவி ஜல்லிகட்டு ஆனது. இதற்கு தடை விதிக்கும் போது கருணாநிதி எங்கு சென்றார். இதை மறைத்து அவர் கபட நாடகம் ஆடுகிறார். காளை, பசு காட்டு விலங்கு அல்ல. கடந்த 1970–ல் நாட்டு மாடு 7 கோடி இருந்தது. தற்போது 7 ஆயிரம் கூட இல்ல. நாட்டு மாடு இருக்கும் வரைக்கும் விவசாயத்தை அழிக்கவே முடியாது. ஜல்லிகட்டு விளையாட்டை அழிப்பதற்காக தடை விதிக்கவில்லை. நாட்டு மாடு இனத்தை அழிக்கவே தடை விதித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை என்றால், கேரளாவில் நடக்கும் யானை பந்தயம், ஐதராபாத்தில் நடக்கும் குதிரை பந்தயம், ராஜஸ்தானில் நடக்கும் ஒட்டக பந்தய விளையாட்டுக்கு ஏன் தடை விதிக்கவில்லை. இது தழிழனின் பண்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையாகும். தமிழக்கதில் ஆடு, மாடு இருந்தால் தான் இயற்கை விவசாயம் நடக்கும். அதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆடு, மாடு மேய்த்தல் அரசு தொழில் ஆக்கப்படும் என்கிறோம்.
தற்போது 90 சதவீதம் பேர் கறி, பால் சாப்பிடுகின்றனர். அதனை புரிந்து கொண்டு அடுத்த தலைமுறைக்காக அரசியல் செய்ய வேண்டும். தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை ஜெயலலிதா, கருணாநிதி ஏன் தடுக்கவில்லை. ஏனென்றால் தமிழகம் தகப்பன் இல்லாத நாடாக மாறிவிட்டது கேட்பார் இல்லை.
தேர்தலில் மாற்றம் என்பது கட்சி, தலைமை, சின்னம், என்பது தான். இந்த தேர்தலை மாறுதலாக பார்க்க வேண்டும். ஏனென்றால் இதுவரை மேலே இருந்த திராவிடர் கீழே வருவர். கீழே கிடந்த தமிழர் மேலே வருவர் என்பது தான் தமிழகத்தின் மாற்றம். ஆகையால் எங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு சீமான் பேசினார்.