தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 773பேர் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இத்தேர்வில், தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில், 499 மதிப்பெண்கள் பெற்ற 41 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். 498 மதிப்பெண்களுடன் 192 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களில், 3 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கின்றனர். இவர்கள் தவிர 16 அரசு பள்ளி மாணவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர். கணித பாடத்தில், 27 ஆயிரத்து 134 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 853 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். சமூக அறிவியலில் 51 ஆயிரத்து 629 பேரும் ஆங்கிலத்தில் 644 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற சாதனை படைத்திருக்கின்றனர்.

சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழி பாடங்களை முதன்மை பாடமாக கொண்டு படித்த 5 மாணவர்கள் 500க்கு 500 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். 499 மதிப்பெண்களுடன் 59 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், 498 மதிப்பெண்களுடன் 232 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். பிறமொழி பாடங்களில் 586 மாணவர்கள் சதமெடுத்து சாதனை படைத்துள்ளனர்.

10ம் வகுப்புதமிழகம்தேர்வு முடிவுகள்பொதுத்தேர்வுமாணவர்கள்
Comments (0)
Add Comment