தமிழகம் புதுச்சேரியில் மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

லட்சத்தீவு அருகே நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தென் தீபகற்பத்தின் மேலடுக்கில் நிலவி வந்த மிதமான காற்றுப்போக்குக் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.தற்போது அந்த காற்றுப்போக்கு மாறி லட்சத்தீவில் மேலடுக்கு சுழற்சியாக நீடிக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம்,புதுச்சேரியில் அநேக இடங்களில் மழையும்,ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 10 செ.மீ மழையும், ராமேஸ்வரத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

ஆய்வுசுழற்சிசென்னைதமிழகம்நீடிப்புநேரம்புதுச்சேரிமேலடுக்குமையம்லட்சதீவுவானிலை
Comments (0)
Add Comment