தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

திருவள்ளுர் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட 550 பேரின் மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, 2 வாரத்திற்குள் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பாண்டவாக்கம் பகுதியில் இருந்து, 180 குடும்பங்களைச் சேர்ந்த 550 கொத்தடிமைகள் கடந்த 2 ஆம் தேதி மீட்கப்பட்டதாக, செய்தித்தாள் ஒன்றில் செய்தி வெளியானது.   இதன் அடிப்படையில், தமிழக தொழிலாளர் நலத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், செய்தி குறித்த விரிவானத் தகவல்களை, 2 வார காலத்திற்குள் அளிக்குமாறு கோரியுள்ளது.

மேலும், மீட்கப்பட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்குமாறு, தமிழக அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.   மீட்கப்பட்டவர்கள் அனைவரும், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உரிமை ஆணையம்கொத்தடிமைதிருவள்ளூர்தேசியநடவடிக்கைமனிதமறுவாழ்வுமாவட்டம்மீட்பு
Comments (0)
Add Comment