தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்!

தமிழக போலீஸ் துறையில் புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றி வந்த, ஏழு இன்ஸ்பெக்டர்கள், எஸ்.பி.,சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்ட, எஸ்.பி.,சி.ஐ.டி., பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ், சென்னை ஹேமலதா, இமானுவேல் ராயப்பன், புதுக்கோட்டை ஆனந்த், திண்டுக்கல் வெங்கடாஜலபதி, தேனி ஜோதிபாபு, விருதுநகர் ராஜதுரை ஆகியோர், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல், க்யூ பிராஞ்ச், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த, 14 இன்ஸ்பெக்டர்கள் லஞ்சஒழிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருக்கோவிலூர் விஜயகுமார், திருநெல்வேலி கணேஷ்பாபு ஆகியோர், க்யூ பிராஞ்ச் பிரிவில் இருந்து, எஸ்.பி.,சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தில், சிறப்பு மற்றும் தனிப்பிரிவுகளில் பணியாற்றி வந்த, 38 இன்ஸ்பெக்டர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் உதவி ஆய்வாளர் திருமதி செல்வாம்பால் (Vellore PRS) மரணம் இயற்கையான மரணம் அல்ல. இறப்பிற்கு 15 நாட்கள் முன்பு வேலை முடித்து இல்லம் செல்லும் வழியில் செயின் பறிக்க முயன்ற திருடர்களிடம் ஏற்பட்ட போராட்டத்தில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தினால் நரம்பு பாதிக்கப்பட்டு அதனால் நுரையீரல் பழுதடைந்து சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். கைதிகள் இன்னும் பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆய்வாளர்கள்காவல்துறைதனிப்பிரிவுதமிழகம்பிரிவுகள்மாற்றம்
Comments (0)
Add Comment