தமிழகத்தில் பாஜக அரசின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், ராஜா இவ்வாறு கூறியுள்ளார். கோவையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர் ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வர எல்லா உரிமையுண்டு. அவர் அரசியலுக்கு வரும் முடிவை எடுத்தால் நான் வரவேற்பேன்.
தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்காது. தமிழகத்தில் சாதகமான சூழலை பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடிக்க முற்படும். தமிழக அரசை பாஜக நேரிடையாகவே இயக்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்