தமிழக மீனவர்களின் படகுகளை சிங்களப் படையினர் திட்டமிட்டே உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர் – ராமதாஸ்

தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படுவதற்கு இலங்கை அரசிடம் இழப்பீடு பெற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் மற்றும் அதற்கு முன்பாக கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகள் உட்பட மொத்தம் 72 படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து பிடித்து வைத்திருக்கிறது.

யாழ், ஊர்காவற்துறை துறைமுகத்தில் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள் தொடர் மழை, கடும் வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது. மற்றொரு புறம் தமிழக மீனவர்களின் படகுகளை சிங்களப் படையினர் திட்டமிட்டே உடைத்து சேதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு சேதப்படுத்தப்பட்ட படகுகளை இலங்கை அரசு அண்மையில் ரூ.8 லட்சத்திற்கு சிங்கள வணிகர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்திருக்கிறது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால் படகுகளை இழந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மழை மற்றும் வெயிலால் சேதமடைந்துவிட்டன என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான படகுகளும் சென்னை உள்ளிட்ட இடங்களில் மிக பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால், தமிழக மீனவர்களின் படகுகளை திட்டமிட்டு உடைத்து சேதப்படுத்திவிட்டு, இயற்கை மீது பழி போடும் இலங்கை அரசின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் ராஜபக்ச அரசு, இப்போது தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அவர்களை பிழைப்பற்றவர்களாக்கி முடக்கியிருக்கிறது.

72 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றன.

மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்டுத் தருவோம் என்று வாக்குறுதி அளித்த மத்திய ஆட்சியாளர்கள், இன்றுவரை அதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ, ஒவ்வொருமுறை மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக கருதுகிறார்.

மீனவர்களின் படகுகளை திட்டமிட்டு அழிக்கும் இலங்கை அரசுக்கு சரியான பதிலடி தரப்பட வேண்டும். இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவிப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

சேதமடைந்த படகுகளுக்கு பதில் புதிய படகுகளை வாங்க இழப்பீடு தர வேண்டும் என எச்சரிக்க வேண்டும்.

இதை தமிழக அரசும், மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அழைத்துஇந்தியாவுக்கானயஇலங்கைஉடனடியாககண்டனம்செய்யப்பட்டதூதரைதெரிவிப்பதுடன்படகுகளைபறிமுதல்விடுவிக்கவேண்டும்
Comments (0)
Add Comment