தமிழக மீனவர்களின் படகுகளை கோரியுள்ள இந்தியா!

இலங்கை பறிமுதல் செய்த மீனவ படகுகளை விடுவிக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
எனினும், எந்த வகையிலும் இந்திய படகுகள் விடுவிக்கப்படமாட்டாதென அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
இருநாட்டு மீனவர் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான திகதி இந்திய அரசினால் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், கடந்த 30 வருடங்களாகவே நாட்டின் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு, பின்னர் அவர்கள் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.
இதுகுறித்து அப்போது பெரிதாக செய்திகள் வெளிவரவில்லை எனக் குறிப்பிட்ட கடற்றொழில் அமைச்சர், மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து இந்தளவிற்கு கரிசனை காட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது சுமார் 150 மீனவ படகுகளை இலங்கையில் தடுத்து வைத்துள்ளதாலேயே இந்தியா மீனவர் விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தைகளுக்காக முன்வந்துள்ளது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சர்இந்தியாஇலங்கைகடற்றொழில்படகுகள்பேச்சுவார்த்தைமீனவர்கள்
Comments (0)
Add Comment