ஜனவரி மாதம் 29ம் தேதி ராமேசுவரத்தை சேர்ந்த 38 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது. பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்று சிறையில் அடைத்தது. இன்று அந்நாட்டு ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் 38 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு மார்ச் 25 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.