தமிழக மீனவர்களை தொடர்ந்தும் தாக்கி வரும் சிறிலங்கா கடற்படை

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை தாக்கி அவர்களது மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர். ஒவ்வொரு முறையும் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சிறைபிடிப்பதும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடிப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. அதன்படி ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 700–க்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப் படகுகளில் கடலுக்கு சென்றனர்.

இவர்களில் ஒருதரப்பினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் சிறிய ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் மீனவர்களை பார்த்ததும் தரக் குறைவாக பேசி படகுகளில் ஏறி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசினர். மேலும் மீனவர்களை தாக்கி இந்த பகுதிக்கு மீன்பிடிக்க வரக் கூடாது என கூறி விரட்டியடித்தனர். இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் அவசர, அவசரமாக கரைக்கு திரும்பினர். இலங்கை கடற்படை விரட்டியடித்ததால் மீனவர்கள் வெறுங்கையுடன் திரும்பினர்.

கச்சதீவுகடற்படைசாதனம்சிறிலங்காசேதம்தமிழகதாக்குதல்மீனவர்களைமீன்பிடிராமேஸ்வரம்
Comments (0)
Add Comment